பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χίν ஆறாம் இயலில் செருகு கவிதைகளிலிருந்து அவதரித்த ஒரு கற்பனைப் படைப்பு அமைகின்றது. 'பல அநாமதேயங் கள் கலந்த பட்டினத்தார் என்ற திருநாமத்துடன் நடமாடும் ஒரு கற்பனைப் பெரியார் காட்டப் பெறுகின்றார். முதலிருவ ரைப் போல் ஓர் அன்னை வயிற்றிலிருந்து பிறந்து வளர்ந்து புகழ் பெற்றவர் அல்லர் இவர் என்பது விளக்கப் பெறுகின்றது. இந்த அரிய சிறிய நூலுக்கு அணிந்துரை' வழங்கியவர் என்கெழுதகை நண்பர், ஒரு பொறியாளர், தொழிலதிபர்; இத்தனைக்கும் மேலாக ஒரு சைவ சித்தாந்தி: சைவ சமய நூல்களில் ஆழங்கால்பட்டவர். முத்து விழாக் கண்டவர் (அகவை 70), தொழில் துறையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவராக இருப்பவர். வெளிநாடுகளுக்கு (அமெரிக்கா, இரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஏமன், ஜப்பான், துபாய் போன்றவை) நாடுகளில் நடை பெற்ற தொழில் துறை மாநாடுகளில் பங்கு கொண்டு நடைமு றையில் பயன்படும் பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி உலகப் புகழ் பெற்றவர்; பலப்பல விருதுகளையும் பெற்றவர். தவிர, கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்திலும், பிற இடங்களிலும் சைவ சித்தாந்தத்திலும் பல ஆய்வுக் கட்டுரை கள் வழங்கிய தமிழ் இலக்கியப் புலவர். அண்ணாநகர் தமிழ்ச் சங்கம் பல்லாண்டுகட்கு முன்னரே இவரை என்கெழுதகை நண்பராகச் சேர்த்து வைத்தது. என்னுடைய நினைவுக் குமிழிகள் என்ற நூல் ஒன்றினை இவரால் வெளியிடும் அரிய வாய்ப்பினையும் பெற்றேன். இப்பொழுது இந்நூலுக்கு 'அ னிந்துரை பெறும் வாய்ப்பினையும் பெறுகின்றேன். பண் பாட்டுக்கு இலக்கியமாகத் திகழும் இவ்அரிய நண்பருக்கு என் இதயங்கலந்த நன்றி உரியது. இந்த நூலை பல்லாண்டுகள் நகரத்தார் பெருமக்களுடன் சேர்ந்து வாழவும், அவர்தம் பண்பாட்டுடன் கூடிய பக்தி நெறிகளில் கலந்து நுகரவும் வாய்ப்பு பெற்ற அப்பெருமக்க ளுக்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன்.