பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோரணவாயில் # 3 + சிறப்புப் பாயிரம் கூறுதல் என்ற ஒரு மரபு பண் டைக் காலத்தில் இருந்தது. அதன்படி ஆக்கியோன் பெயர், வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலிய பொருள், கேட்போர், பயன் ஆகிய எட்டுப் பொருளும் இவற்றுக்கு மேலாக காலம், களன், காரணம் என்ற முறையும் கூட்டிச் சொல்லலாம் என்பது. எனவே, சிற்சில நூல்களையும் அவற்றை இயற்றிய ஆசிரியர்க ளையும்பற்றிய செய்திகள் சிறப்புப் பாயிரத்தினால் விளங்குகின்றன. பனம்பாரனாரின் தொல்காப்பியப் பாயிரம் மிகு புகழ் பெற்றது இருப்பினும் காலம், பெரும்பாலும் விளங்குவதில்லை; பல நூல்களுக்கு ஆசிரியர் இன்னாரென்று தெளிவாகாதபோது காலம் விளங்காதது வியப்பன்று. சில சமயங்களில் திருக் கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகளால் அறி யப் பெறும் செய்திகளால் பல வரலாறுகள் விளக்கமுறு கின்றன. புலவர் வரலாற்றிலும் சமயப் பெரியார் வரலாற்றி லும் மக்கள் இயல்பைக் கடந்த செய்திகளும் கதைக ளும் பல்கிப் பெருகி மூடுபனிபோல் அமைந்து உண் மையைக் காண முடியாமல் மறைக்கின்றன. உமாபதி சிவம், வேதாந்த தேசிகர், அருணகிரிநாதர் போன்றோர் வாழ்க்கை வரலாற்றில் இத்தகைய ‘மூடுபனிகளைக்' காணலாம். அற்புத நிகழ்ச்சிகளால் நாம் எதையும் நிலை நாட்ட முடியும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில் இத்தகைய ‘மூடுபனிகள் அதிகமாகத் தோன் றுதல் வியப்பன்று. ஆகவே, அற்புதச் செயல்களும் சம்பவங்களும்போல வழிவழியாக வருபவற்றையும் நாம் தவிர்க்க முடிவதில்லை. நாம் எழுதுபவற்றில் அவை கலந்தே வரும். 3. மேலது - மேலது - நூற்பா 47,48