பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 4 + பட்டினத்தடிகள் நூலாசிரியர்களின் பெயர்களும் குழப்பத்தை விளைவிக்கின்றன. ஒரே பெயரைக் கொண்டவர்கள் பலர். அவ்வையார், பட்டினத்தார் என்ற இரு பெயர் களை மட்டிலும் ஈண்டு நோக்கலாம். சங்ககால அவ்வை யார் ஒருவர்; இடைக்கால அவ்வையார் மற்றொருவர்; பிற்கால அவ்வையார் பிறர் ஒருவர். பின்னும் சிலரும் வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால், அவ்வையார் வரலாறுக ளில் ஒரே அவ்வையார்தான். அவரே அதிகமானைப் பாடிய சங்க நூற் புலவர்; அவரே சேரமான் பெருமாள் காலத்தில் இருந்தார்; அவரே ஆத்திசூடி மூதுரைப் பாடினார். அவரே விநாயகர் அகவலும் ஞானக்குறளும் பாடினார் என்பதே இதுவரை எழுதியுள்ள இலக்கிய ஆசிரியர்களின் கூற்றுகள். இக்கூற்றுகளை ஆராய்ந்து இன்னின்ன காலத்தில் இன்னவர் வாழ்ந்தார், அவரைக் குறித்த கதை இது, அவர் பாடிய பாடல் இது என்று பாகுபடுத்தி முடிவு காண்பது எளிதான செயலன்று. பட்டினத்தார் போன்றோருக்கும் இந்நிலைமை பொருந் துவதேயாகும். அடுத்துவரும் இய்லில் பட்டினத்தடிக ளின் வாழ்க்கை வரலாறு கூறும்போது இத்தகைய இடர்ப்பாடுகளைக் காணலாம். பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள் ளையார், திருவெண்காடர், திருவெண்காட்டடிகள் என் றெல்லாம் வழங்கப்பெறும் இப்பெருமகனார் பூம்புகார் என்று வழங்கப்பெறும் காவிரிப்பூம்பட்டினத்தில் தனவ னிகர் குலத்தில் அவதரித்தவர். இலிங்கமாக மாறி திருக் கோயில் கொண்ட இடம் திருவொற்றியூர்." இன்றும் சென்னை வாழ் நகரத்தார் தங்கள் இல்லத்தில் யாரேனும் சிவப்பேறு அடைந்தால், அவருக்குரிய எல்லாச் சடங்கு களும் திருவொற்றியூரில் செய்யப் பெற்று வருவது நடைமுறையில் இருந்து வருகின்றது. 4. செட்டிகுலப் பெருமக்கள் அனைவரும் இவரைத் தம் குலத்தவர் என்றே போற்றுகின்றனர்.