பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 2 பட்டினத்தடிகள் வாழ்க்கை வரலாறு தம் நாட்டில் வாழ்க்கை வரலாறும் நாட்டு வரலாறும் செம்மையாக அமையவில்லை. பொய்யும் புளுகும் புனைசுருட்டும் புராணங்கள் உருவில் பின் னிப் பிணைந்து கொண்டு அறிஞர்களையே மயக்குவ தைக் காணலாம். இத்தகைய அடிப்படையில்தான் தல புராணங்கள் அதிகமாகப் பல்கி பெருகியுள்ளதையும் தெளியலாம். படிப்பதற்கே அருவருக்கத்தக்க குறிப்பு கள் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் என்ற புரா ணத்திலும் புகுந்து கொண்டிருப்பதை ஊகித்து உணர் வார்க்குத் தெளிவாகத் தெரியும். மாபாதகங்கள் தீர்த்த படலங்கள் போன்றவை இதற்கு இமாலயச் சான்றுகள். அடியார்கள் அருவருக்கத்தக்க கற்பனைகளைப் படைத்து அவற்றை எல்லாம் வல்ல இறைவன் மீது ஏற்றி வைத்திருப்பது வியப்பினும் வியப்பாகும். பட்டினத்தடிகளைப் பற்றிய வரலாற்றில் ஒரு சில பொய்க் கதைகள் புகுந்து கொண்டிருப்பினும் அருவ ருக்கத்தக்கதாக ஒன்றுகூட இல்லாதிருப்பது நமக்கு மகிழ்ச்சியே. இவரைப் பற்றிய வரலாறு மூவரால் எழு தப் பெற்றுள்ளது. பிற்காலத்துப் பெரியார் ஒருவர் முதன் முதலில் “பட்டினத்துப் பிள்ளையார் புராணம்" என்ற ஒரு நூல் எழுதியுள்ளார். இதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொழுவூர் வேலாயுத முதலியார் என்ற புலவர் 'திருவெண்காட்டடிகள் சரித்திரம் என்ற ஒர் உரைநடை நூல் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு நூல்களே பட்டினத்தடிகளின் வரலாற்றுக்கு ஆதாரங்கள். இவற்றின் பின்னர் தண்டபாணி சுவாமிகள் தாம் செய்த புலவர் புராணத்தில் பல புதிய கதைகளை யும் சேர்த்துப் பட்டினத்தார் சரித்திரமாகப் பாடி யுள்ளார். இக்கதைகளை அறியப் புகுமுன் ஒரு செய்தி மனத் தில் கொள்ள வேண்டும். பட்டினத்தார் சரித்திரம் என்று வழங்குவதெல்லாம் முற்காலத்துப் பட்டினத்தாரைச்