பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தடிகள் வாழ்க்கை வரலாறு + 13 4 கொண்டார். அப்பிள்ளை அபரிமிதமான இலாபம் சம் பாதித்துத் தந்ததும், ஒருமுறை பொருளையெல்லாம் போக்கிவிட்டமையால் அவரைச் சிறையிலடைத்தார். பிள்ளையோ திருவெண்காடர் மனைவியான சிவகலை அம்மையாரிடம் மட்டிலும் தமது தெய்வக் கோலத் தைக் காட்டி மறைந்தார். பிள்ளையை இழந்த தாயும் சின்னாளில் சிவகதி அடைந்தாள். ஆனால், திருவெண் காடருக்குச் செல்வ மயக்கம் நீங்கவில்லை. ஒருமுறை அவர் கப்பலேறி பொருள் தேடச் சென்றிருந்தபோது குருவாகிய பாணர் தம் மனைவியிடம் காதற்ற ஊசிக ளைக் காட்டி 'போங்கால் இவைகூட வாரா' என் றொரு சீட்டெழுதி வைத்துத் திருவெண்காடரிடம் தரும் படி தம் மனைவியிடம் கொடுத்துச் சிவபதம் அடைந் தார். வந்த திருவெண்காடர் ஊசிகளையும் சீட்டையும் கண்டு உடனே மெய்ஞ்ஞானம் வரப் பெற்றார். பின்னர் சிவத்தலப் பயணத்தை மேற்கொண்டு வரும்போது சிவபெருமான் ஆசாரியன் உருவோடு தோன்றி இவர் கையில் ஒரு பேய்க் கரும்பைத் தந்து 'இஃது எந்தத் திருத்தலத்தில் இனிக்குமோ அதுவே உனக்கு இறப்பும் பிறப்புமில்லாச் சிவகதி அளிக்கும்த லம்’ என்று சொல்லி மறைந்தார். கரும்பு சிறிதும் வாடாமல் உலராமல் இருந்தது. எல்லாத் தலங்களிலும், கசந்த இந்தக் கரும்பு ஒற்றியூரில் இனித்தது கண்டு அதுவே தாம் முக்தி அடையும் தலம் என்று உய்த்து ணர்ந்து, அங்குக் கடற்கரையில் சிவலிங்கத் திருமேனி யானார். ஒரு வரலாற்றில் உண்மைக் கருத்துகள் ஊடுருவி அமைதலைவிட பொய்க் கதைகள் விரைவாகவும் ஊடு ருவிச் சென்று அமைதல் உலகியல்பாக இருத்தலைக் காணலாம். ஒரு பொய் வதந்தி பரவுவதை நோக்கினால் அதனை மக்கள் எவ்வாறு சுவைத்து வேகமாகப் பரப்பு வதைக் காணலாம். அரசியல்வாதிகளிடம் இப்பண்பு