பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 3 பத்திரகிரியார் 'பத்திரகிரியார்' என்ற பெரியார் வரலாறு பட்டி னத்தடிகளின் வரலாற்றோடு பிணைந்துள்ளது. தமிழ் நாடு நன்கறிந்த பட்டினத்தடிகள் காதற்ற ஊசியைக் கண்டு அக்கணமே பாரனைத்தும் பொய் எனக் கண்டு, உணர்ந்து, தம் வாழ்க்கையைத் துறந்து, உடுத்த கோவ னத்தோடு நாடெங்கும் சுற்றி கொங்கு நாடு கடந்து, துளுவ நாடு அடைந்தார். அங்குள்ள உஞ்சேனை மாகா ணம் என்ற ஊரின் புறத்தேயுள்ள கணபதி கோயிலில் தங்கியிருந்தார். அச்சமயம் அவ்வூரை ஆண்ட அரசன் பத்திரிகிரி. அவனுடைய அரண்மனையில் சில கள்வர் புகுந்து அணிகலன்களைக் கவர்ந்து ஓடினர். ஒடிய வழியில் ஒரு கணபதிக் கோயில் இருந்தது. தாங்கள் திருடப் போகும் முன் அவர்கள் இப்பிள்ளையாரை வணங்கித் தங்களுக்குப் பொருள் கிடைத்தால் இவருக் கும் ஒரு பங்கு தருவதாக வழிபாடு செய்து சென்றிருந்த மையால் அதன்படி இப்பொழுது இங்குப் போந்து ஒரு மாணிக்க மாலையைப் பிள்ளையார் கழுத்தில் எறிந்து விட்டுப் போயினர். அவர்கள் எறிந்த மாலை பிள்ளை யார் கழுத்தில் விழவில்லை. அந்த இருளில் பிள்ளை யார் உருவத்தின் பின்னே நிட்டையோடு இருந்த பட்டி னத்தடிகளின் கழுத்தில் விழுந்தது. தம்மை மறந்த நிலையில் தியானத்திலிருந்த அடிகட்கு இதனை அறி யும் உணர்வு இல்லை. கள்வர்களைத் தேடி வந்த அரண்மனைக் காவலர் கள் இக்கோயிலில் கள்வர்கள் ஒளிந்திருக்கக் கூடும் என்று ஐயுற்று கோயிலில் நுழைந்து பார்த்தபோது கழுத்தில் மாணிக்க மாலையோடு இருந்த பட்டினத்தடிக ளைக் கண்ணுற்றனர். இவர்தம் மெளனநிலையைக்