பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரகிரியார் # 17 4 திருக்கண் நோக்கால் அரசன் பக்குவம் அடைந்து அவர் தம் திருவடிகளில் வீழ்ந்து, 'அடிகள் பெருமானே, அடியேன் அறியாமையால் இழைத்த பிழையைப் பொறுத்தருளி அடியேனையும் ஆட்கொள்ள வேண் டும்' என்று இறைஞ்சினான். அவனுடைய பக்குவமன நிலையைக் கண்ணுற்ற பட்டினத்தடிகள் அக்கோமகனைத் திருவிடைமருதுரர் ஏகுமாறு பணித்தார்; திருவிடைமருதூர்ப் பெருமானா கிய மருதவாணர் தமக்குப் பிள்ளையாக சில காலம் வந்திருந்தமையால் பட்டினத்தடிகளுக்கு அத்தலத்தின் மீது ஈடுபாடு மிகுதி. அக்கட்டளையின்படியே பத்திர கிரியாரும் தம் அரசுரிமையை அக்கணமே உதறித் தள்ளி துறவுக் கோலம் பூண்டு பல நாள் பயணம் செய்து திருவிடைமருதூரை அடைந்தார். அடிகளும் அதேசமயம் தமது பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்து கீழ்க்கோபுர வாயிலில் தங்கினார். பத்திர கிரியாரும் பிச்சை ஏற்று வந்து குரு நிவேதனம் செய்து சேடத்தைத் தாமே உட்கொண்டு குருநாதரின் திருக்கு றிப்பின்படி சிவயோக நிலையில் மேலைக் கோடி வாயி லில் அமர்ந்தார். பத்திரகிரியாரின் பக்குவ காலம் நெருங்கி வந்தது. ஒருநாள் அவர் தம் குருநாதரின் பரிகலச் சேடம் உண் ணுகையில் விதிவசத்தால் ஒரு பெண் நாய்க்குட்டி பசியோடு அவரிடம் வாலைக் குழைத்துக் கொண்டு நின்றது. அதன் நிலையைக் கண்டு இரங்கி தாம் உண்ட பிரசாதத்தில் ஒரு பகுதியை அதற்கு அளித்தார். இதன் பின் அந்த நாய்க்குட்டி அவரை விட்டுப் பிரியாது நாடோறும் அவரிடம் பிரசாதம் உண்டு கொண்டு கூடவே இருந்து வந்தது. இந்த நாய்க்குட்டி முற்பிறப்பில் ஒரு துர்த்தை. ஒரு சமயம் தானும் தன் சோர நாயகனும் உண்ட உணவுச் 3 - ماسا ئا