பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் $ 25 + என்று கட்டளைக் கலித்துறையில் வெளியிட்டு மகிழ் கின்றார் அடிகள் பெருமான். தில்லைக் கூத்தன் திருநடனம் புரியுங்கால் அப் பெருமான் நிலத்தே ஊன்றிய திருவடி கீழுலகம் ஏழி னையும் கடந்து சென்றது. அவனது திருமுடி எல்லா உலகங்களையும் கடந்து சென்று அண்டத்திற்கு அப் பால் விளங்கியது. இறைவன் வீசியாடும் தோள்கள் எட்டுத் திசைகளின் புறத்தன. இவ்வழகிய தோற்றத்தை மான சீகமாக அநுபவித்த அடிகள், அடியொன்று பாதம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும் வெள்ளைப் பொடியொன்று தோள்.எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின் செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்றன் திருநடமே (6) என்ற பாடலில் பதிவு செய்து மகிழ்கின்றார். உலகமே உருவாகிய இறைவன் ஆடுங்கால் அவன் கூத்தினை பொறுத்துக் கொள்ளும் நோன்மை இவ்வுலகிற்கு இல்லை என்ற இப்பாடலின் கருத்தில் நம் உள்ளம் தோய்ந்து மகிழ்கின்றது. இவ்விடத்தில், அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம் மறின்நாடு கைபேரின் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றாது அரங்கு." என்ற காரைக்கால் அம்மையாரின் கவிதையையொட்டி இக்கவிதை அமைந்திருக்க வேண்டும் என்பதை நினைந்து மகிழ்கின்றோம். 2 அறபுதத் திருவந்தாதி - 77