பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் $ 29 # ஒலிக்கும் கடலிடத்தே பெருத்தும் சிறுத்தும் எண்ணில வாய்த் தோன்றி மீளவும் அக்கடலின் கண்ணே அடங்கு மாறு போன்று இயங்குவன நிற்பனவாகிய (சராசரமா கிய) உலகம் அடங்கலும் இறைவனிடத்தே தோன்றி மீளவும் அவன்கண் ஒடுங்குவன எனவும், தான் ஒன்றி னும் தோன்றி ஒடுங்காத தனி முதற் பொருளாகத் திகழ்வோன் இறைவன் எனவும் விளக்கித் திருவுள்ளங் கொண்ட அடிகள், நுரையும் திரையும் நொப்புறு கொட்பும வரையில் சீகர வாரியும் குரைகடல் பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி இருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய் என்று தில்லைச் சிற்றம்பலத்தில (24: அடி 26-32) நடனமாடும் உம்பர் நாயகனாகிய சிவபெருமானைப் போற்றிப் பரவுகின்றார். உலகனைத்தும் இறைவன் பால் தோன்றி ஒடுங்குவன என்றும் கருத்தமைந்த இத்தொடரை அடிப்படையாகக் கொண்டு இந்த அகிலத் திற்கு இறைவனே முதற் காரணம் என்று சாதிப்பவர்க ளும் உளர். இது சைவ சித்தாந்தக் கருத்திற்கு முரண்பட் டது. இவர்கள் கருதியபடி இந்த அகிலம் இறைவனா கிய முதற் காரணத்திலிருந்து தோன்றியதென்று உண் மையாயிருக்குமானால் முதற் காரணத்தின் குணங்க ளோடு ஒத்த குணங்களே அதனில் தோன்றிய காரியத்தி லும் உளவாதல் வேண்டும் என்ற நியமம் பற்றி இறை வனிடத்தில் தோன்றிய இந்த அகிலம் அறிவுடைய சித்துப் பொருளாதல் வேண்டும். ஆயின் உலகம் அறி வற்ற பொருள் என்பது யாவர்க்கும் உடன்பாடு எனி னும், சடப்பொருளாகிய அவ்வுலகம் சித்துப் பொருளா கிய இறைவனை முதற் காரணமாகக் கொண்டு தோன்றி