பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 30 + பட்டினத்தடிகள் யது எனக் கூறுதல் பொருந்தாது. ’ அகிலம் மாயையா கிய உள்பொருளிலிருந்து தோன்றி விரிந்து மீளவும் அதன்கண் ஒடுங்கும் என்பதே திருமூலர் முதலிய திருமுறையாசிரியர்களின் துணிபாகும். கிழங்காகிய மூலத்திலிருந்து முளைத்த தாமரையைக் கிழங்கிற்கு ஆதாரமாகிய சேற்றில் முளைத்தது என்ற பொருளில் 'பங்கஜம் என்று வழங்குதலை நாம் அறிவோம். அது போன்று மாயையாகிய உள் பொருளிலிருந்து உலகம் தோன்றி மீளவும் அதன்கண் அஃது ஒடுங்குவதாகிய உலகத் தொகுதியை மாய்ைக்கு ஆதாரமாகிய முதல்வ னிடத்துத் தோன்றி ஒடுங்குவதாகக் கூறுவது வழக்கி யல் மரபாகும். இம்மரபின்படி நீரில் தோன்றி ஒடுங்கும் நுரை அலை முதலியவற்றை நீர்க்கு இடமாகிய கடலில் தோன்றி ஒடுங்குதல் போல் என அடிகள் உவமையாக எடுத்தாளுதலால் சராசரமாகிய உலகத் தொகுதிக்கு இறைவன் ஆதாரமாவதன்றி முதற் காரணமாகான் என் பதே அடிகளின் கருத்தென்பது இனிது புலனாகும். “நின்னிடைத் தோன்றி நின்டை ஒடுங்கும்' என்றது மாயைக்குத் தாரகமாதல் பற்றி என்று உணர்க. அக் கருத்து உணர்ந்து கோடற்கென்றே நீரில் தோன்றி யொடுங்கும் நுரை முதலியவற்றை நீர்க்கிடமாகிய கட லில் தோன்றியொடுங்குதல் போல என்று உவமை கூறினாராகலின், ஆண்டு ஆசங்கைக்கு இடமின்மை யுணர்க' எனச் சிவஞான சுவாமிகள் இத்தொடரின் பொருளைத் தெளிவுபடுத்தினமை ஈண்டுக் கருதத் தக்க தாகும். கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் இந்திரன் கோமகுடத்து அண்டர்மிண் டித்தொழும் அம்பலக் கூத்தனுக்கு அன்புசெய்யா 3. வைண சமயம் இதனை ஒப்புக் கொள்ளாது. அஃது உலகம் என்பதில் அசித்துப பொருளகளும் அடங்கும என்ற கொள்கையைக் கொண்டது. 4 சிவஞானபோதம் பேருரை 3ஆம் சூத்திரம் இரண்டாம் அதிகாரம்,