பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 34 + பட்டினத்தடிகள் இன்றுவரைக் கழிந்த காலங்களிலெல்லாம் காமம் வெகுளி பொய் என்னும் குற்றங்களால் விளைந்த தீமையாகிய இழிந்த குப்பைகள் மூடிக் கிடந்தவற்றை அரிதின் நீக்கி, எதிர்த்துத் தாக்கும் வன்மை மிக்க ஐம்பு லன்களாகிய கடாக்கள் கட்டப்பட்டு நின்றனவற்றைக் கட்டவிழ்த்துத் துரத்தி, அவற்றால் புழுதியான அவ்வி டத்தை அன்பெனும் நீரால் மெழுகித் துய்மை செய்து, அருளாகிய விளக்கை ஒளி பெற ஏற்றி வைத்து, துன்ப மாகிய இருளைப் போக்கி, வாய்மையாகிய மேற்கட் டியை மேலே விரித்து, என் சிந்தையாகிய அறையை எந்தையாகிய நீ இனிது அமர்வதற்கு ஏற்ற பள்ளியறை யாகச் செய்து அதன் நடுவே அகத்தாமரையாகிய பூந் தவிசினை இட்டு வைத்துள்ளேன். எம்பெருமானாகிய நீ நின் செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற உமையம் மையாருடன் அடியேனது உள்ளமாகிய இவ்விடத்தில் எழுந்தருளுதல் வேண்டும்” என அடிகள் புகலி நாதனி டம் விண்ணப்பிக்கின்றார். இவ்வேண்டுகோள் உலக மக்கள் மனம் திருந்தி இறைவனை வழிபட்டு உய்யும் முறையினை நன்கு அறிவுறுத்துவதாகும். சீகாழியாகிய திருத்தலம் ஒர் ஊழிக் காலத்திலே தேவர் முதலியோர்க் குப் பற்றுக் கோடாகி ஊழிப் பெருவெள்ளத்தில் தோணி யாய் மிதந்த வரலாறு இப்பாடலில் 14 முதல் 21 வரையுள்ள அடிகளில் விரித்துரைக்கப் பெற்றமை கண்டு மகிழத்தக்கது. 'அருள் பழுத் தளித்த' என்ற முதற் குறிப்புடைய அகவலில் (7) அடிகள் இறைவன் திருமுன் சில செய்தி களை வைத்து விண்ணப்பிக்கும் போக்கு கல்நெஞ்சத் தையும் கரைக்கும் பான்மையது. 'மாதொரு பாகனாகிய பெருமானே, நினது திரு வுள்ளக் குறிப்பால் இவ்வகிலம் தோன்றிய நாள் தொட்டு வேறு வேறு இயல் பினவாகிய பல்வகைப் பிறப்புகளிலும் உயர்தினை மக்களாகவும் அஃறிணை