பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 35 + உயிர்களாகவும் தோன்றிய யாவரும் யாவையுமாகிய உயிர்த் தொகுதியில் அடியேனுக்குத் தனித்தனியே தந்தையாகியும் தாயாகியும் வந்து உறவு கொள்ளாதவர் ஒருவரும் இலர். அடியேனும் அவ்வுயிர்களுக்குத் தந் தையாகவும் தாயாகவும் பிறந்து உறவு கொள்ளாததும் இல்லை. உலகில் யான் பிறவாத இடமும் இல்லை; இறவாத இடமும் இல்லை. அடியேனது உடலைத் தின்னாத உயிர்களும் இல்லை. அவற்றின் உடல்களை அடியேன் தின்னத் தவறியதும் இல்லை. இங்ங்னம் காலமெல்லாம் கடந்தன. இவ்வாறு நெடுங்காலமாகப் பிறப்பிறப்புச் சுழலில் தடுமாறும் பழக்கம் பெற்ற அடியேன் இனி இதற்குச் சோர்ந்து இளைக்கும் இயல் புடையேன் அல்லேன். அருள் சோதியாய்த் திகழும் நினது திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தினை உணர்ந்தோ தும் அருள் நூல்களைப் பயின்றவனும் அல்லேன். இந்நூல்களைப் பயின்ற ஆசிரியர்களை அடைந்து கேட்டு அறிந்தவனும் அல்லேன். நாயேன் இங்ங்னம் நின்னை வழிபடுதற்குரிய தகுதியற்றவனாயினும் அடி யேனுக்கு ஒய்வான காலத்தில் அடியேன் நின்னை நினைத்து இட்டது பச்சிலையாயினும் அதனை நறுமல ராகவும், அடியேன் நின்னை நினைந்து சொல்வது பிழை மலிந்த சொல்லாயினும் நின்னை வழிபடுதற் குரிய மந்திரமாகவும் கொண்டு எளியேனைப் பிறவிப் பெருங்கடலில் ஆழாத வண்ணம் நின் திருவடியாகிய நெடுங்கரையில் சேர்த்துக் காத்தல் அருளாளனாகிய நினக்குரிய கடமையாகும்’ எனக் கழுமலவாணனை நோக்கி அடிகள் வேண்டிக் கொள்வதாக அமைந்தது இத்தெய்வப் பாடல். இறைவனது திருவருளாகிய கண்ணின் உதவி யைப் பெறுவதற்கு முன் அடிகள் இல்லன உளவாய் உள்ளன. காணாது அறியாமையாகிய இருளில் பட்டு அல்லல் பட்டார். திருவருளாகிய ஞான நாட்டம் பெற்ற