பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 36 # பட்டினத்தடிகள் பின்னர் அசத்தாகிய உலகத் தொகுதி மறைந்தது. இறை வனாகிய மெய்ப் பொருள் எங்குமாய் விளங்கித் தோன் றியது - இந்தக் கருத்து வசையில் காட்சி எனத் தொடங்கும் பத்தாம் பாடலில் தெளிவாக விளக்கப் பெறுகின்றது. போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல் உண்டெங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேஇணை யாகச்செப்பும் சூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர் வண்டின் தாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே (12) எனவரும் திருப்பாடல், யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைபிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே" என்ற திருமந்திரப் பொருளை அடியொற்றி இறைவனடி சேர்வதற்கென யாவரும் மேற்கொள்ளுதற்குரிய எளிய வழிபாட்டு முறையைத் தெளிவாக விளக்குதலைக் கண்டு மகிழலாம். (3) திருவிடை மருதூர் மும்மணிக் கோவை: சிவபெரு மான் கோயில் கொண்டுள்ள திருவிடை மருதூர் என் னும் திருப்பதியை அகவல், வெண்பா, கட்டளைக் 6 திருமந்திரம் - முதல் தந்திரம் - 15 தானச் சிறப்பு - 2 (252)