பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் 4 37 4 கலித்துறை என முறைப்படித் தொகுத்த முப்பது பாடல் களால் போற்றிப் பரவிய பனுவல் இது. ஆதலால் 'மும்மணிக் கோவை என்ற பெயர் பெற்றது. ‘தெய்வத் தாமரை செவ்வியின் மலர்ந்து (1) எனத் தொடங்கும் இப்பிரபந்தத்தின் முதல் பாடல் மாதொரு பாகனின் அழகிய திருக்கோலத்தின் இயல்பினைச் சொல் நயம் பொருள் நயம் மிளிர அழகுற விரித்துரைப் LJġ!. வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பத்தி அடியவர் பச்சிலை இடினும் முத்தி கொடுத்து முன்னின் றருளித் திகழ்ந்துள தொருபால் திருவடி யகஞ்சேந்து மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர் மடவரல் மகளிர் வணங்குட வீழ்த்த சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி (அடி 5-17) இவ்வடிகளில் எம்பெருமான் திருவடி விவரிக்கப் பெறு கின்றது. மருதிடங் கொண்ட ஒருதனிக் கடவுள்நின் திருவடி பரவுதும் யாமே நெடுநாள் இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும் சிறைக்கருப் பாசயஞ் சேரா மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே அடி(70-74) என்ற அடிகளில் திருவெண்காட்டடிகள் எம்பெருமான் திருவடியைப் பரவுவது பகரப் பெறுகின்றது; அதன் நோக்கமும் சாற்றப் பெறுகின்றது.