பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 38 + பட்டினத்தடிகள் பிறிதொரு பாடலில் (3) அடியார்கள் பிறிதொன் றில் ஆசையின்றிப் பருகி மகிழ்தற்குரிய பெருந்தேனாக இறைவன் இடைமருதில் வீற்றிருந்து அருள்புரியும் சிறப்பினையும் அத்திருப்பதியை அடைந்து இறை வனை வழிபட்டதனால் தாம் பெற்ற பெருநலங்களை யும் அடிகள் விரித்துரைப்பதை, வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயங்கும் புலன்வழிப்போய்ப் பொருந்தேன் நரகில் புகுகின்றி லேன்புகழ் மாமருதில் பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே (3) என்ற பாடலில் கண்டு மகிழலாம். அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ' என்ற திருவாசகத் தொடர்ப் பொருளை உளங்கொண்ட அடிகள் இப்பாடலில் 'புகழ் மருதிற் பெருந்தேன்' என்ற இடைமருதீசனைப் போற்றிய திறம் நினைந்து மகிழ்கின்றோம். அடுத்து வரும் ஒன்றினோடொன்று எனத் தொடங் கும் நான்காம் பாடல் இறைவனை நினைந்து போற்றுவ தற்கும் 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்ற மணிவாசகப் பெருமான் கருதிய வண்ணம் அவன் அருள் வேண்டும் என்ற உண்மை அறிவுறுத்து 7. திருவா. திருப்பூவல்லி - 2 8. மேலது - சிவபுராணம் - அடி - 18