பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 39 + வதாக அமைகின்றது. இப்பாடலில் அடிகள் 'மருதி றனை இடமாகக் கொண்ட எந்தையே, அடியேன் பிறவிப் பெருஞ்சுழியில் சிக்கித் தடுமாறும்போது அடி யேன் உற்ற துன்பத்தினையும், அடியேனை ஈன்ற போது அடியேன் அன்னை உற்ற துன்பத்தினையும் உள்ளவாறு அறிவார் நின்னைத் தவிர வேறுயாருளர்? பெருகிய துன்பந் தருவதாகிய இப்பிறவிச் சுழலில் பட்டு அடியேன் இனிப் பிறக்கும் வலியுடையேன் அல்லேன். நின்னைப் பற்றி வழிபடும் ஒரு நெறியைத் தவிரப் பிறவிப் பிணிகளைவதற்குப் பிறதொரு வழியும் இல்லை. மீண்டு வாரா வழி அருளும் நின் திருவருள் நெறியில் ஒழுகுவதற்கு விருப்பு வெறுப்பற்ற ஒருமை மனம் வேண்டும். ஐம்புல வேடர்களின் ஆணைவழி கட்டுப்பட்டு நின்று தானல்லாதவற்றைத் தானெனக் கருதும் மயக்க நிலையுடையது அடியேனின் மனம். இம்மனத்தைக் கொண்டு நின்னை நினைந்து போற்று தல் எங்ங்னம் இயலும்? கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலைக் கடக்க எண்ணிய பேதை அடியே னைத் தவிர வேறு யாருளர்? பிறப்பென்னும் பெருங் கடலை அடியேன் கடத்தலும் வேண்டும். அங்ங்ணம் கடத்தற்கு உறுதுணையாக நின்னை நினைத்தலும் வேண்டும். ஒரு நெறியில் நின்று நின்னை நினைந்து போற்றும் வண்ணம் அடியேன் மனத்தை நீ திருத்தியரு ளுதலும் வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்றார். "வாழ்ந்தனம் என்று தொடங்கும் பாடலில்(7) அடி கள் தாம் மேவன செய்தொழுகும் கயவர் வாழ்வும் இறைவனது அருள்வழி ஒழுகும் மெய்த் தொண்டர் வாழ்வும் இன்னவென விளக்கப் பெறுகின்றன. செல்வத்துடன் வாழ்ந்திருக்கின்றோம் எனச் செருக் குற்று இரவலர்க்கு உதவாது தன்னுயிரைப் பாதுகாத்தல் ஒன்றையே குறிக்கொண்டு தன்னால் ஏனைய உயிர்கள் படும் துன்பத்தினைச் சிறிதும் பொருட்படுத்தாது