பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 41 + பேறு பிறிதொன்றும் இல்லை. இங்ங்னம் அடிகள் இடைமருதீசனைப் பணிந்து போற்றுவதாக அமைந்தது இப்பாடற் பகுதி. இதில் அடிகளது செம்மை மனத்தின் சிறப்பு இனிது புலப்படுதல் காணலாம். 'உழைப்பின் வாரா உறுதிகள் (10) எனத் தொடங் கும் பாடலில் தொண்டரது உழவின் திறத்தை உருவக அணி அமைய விரித்துக் கூறியுள்ளமை அருமையினும் அருமை. இத்தகைய உழவினை மேற்கொள்ளாது மனம் என்னும் புனத்தை வறும்பாழாக்கித் தமக்கும் பிறர்க்கும் பயனின்றிக் கழியும் ஏனையோரதும் இழி வையும் புலப்படுத்துவது மற்றொரு சிறப்பு. "மெய்யடியார்கள் மனம் என்னும் புனத்தில் முளைத்துள்ள வஞ்சனையாகிய மரத்தை வேருடன் அகழ்ந்து நீக்குவார்கள். பின்னர் அன்பெனும் பாத்தி கோலி மெய்மையாகிய எருவிட்டுப் பத்தி என்னும் விதையை விதைப்பார்கள். அடுத்து ஆர்வமாகிய நீரைப் பாய்ச்சி, ஐம்பொறிகள் என்னும் பட்டி மாடுகள் உள்ளே நுழையாதபடி சாந்தமாகிய வேலியை அமைத் துக் காப்பார்கள். இந்நிலையில் ஞானம் என்னும் முளை முளைத்து அருளாகிய பசுந்தளிர்கள் தளிர்த்து விளங் கும். அப்பொழுது காமம் வெகுளியாகிய களைகளைக் களைந்தெறிந்து சேமமாகக் காத்து வரும் நிலையில் அப்பயிர் செம்மையாக வளர்ந்து மெய் மயிர் முகிழ்த் துக் கண்ணிர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து திருவைந்தெ ழுந்து எனும் காய் தோன்றும். அடுத்த நிலையில் நீலகண்டமும் முக்கண்ணும் எட்டுத் தோள்களும் ஐந்து திருமுகமும் பவளம் போலும் செந்நிறமுடையதாய் வெள்ளை நீறு பூசி அறுசுவையதனினும் மிக்க சுவையு டையதாய்க் காணினும் கேட்பினும் கருதினும் இனிமை தருவதாய் நிலவெல்லையைக் கடந்து உயர்ந்த மருத மாணிக்கம் என்னும் இனிய கனி மெல்ல மெல்ல முற்றிப் பழுத்து எளிதில் கைவரப் பெறும். தொண்ட