பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 42 # பட்டினத்தடிகள் உழவராகிய மெய்யடியார்கள் அக்கனியை இனிதின் அருந்திச் செம்மாந்திருப்பார்கள். இஃது இங்ங்னமாகவும் சிலர் தம்மனமாகிய புனத் தைப் பண்படுத்தாது வறும் பாழாக்கிக் காமம் காமக் காடு மூடி ஐம்புல வேடர்கள் ஆறலைத்துத் திரியவும் சிற்றின்பமாகிய கானல் நீர் ஓடவும் கல்லா உணர்வாகிய மான் இனம் வருந்தி உழலவும் ஆசை எனும் விதை விழுந்து 'யான் எனப் பெயர் கூறப் பெற்ற நச்சுமர மாக முளைத்து நீண்டு வளர்ந்து பொய்மையாகிய கிளைகளை எம்மருங்கும் விட்டுப் பாவமாகிய தழைக ளைத் தழைத்து, பூவென்று சொல்லும்படி கொடுமை என்ற அரும்புகளை ஈன்று தீமை மலர்ந்து துன்பமாகிய பலகாய்களைக் கொத்தாகத் தாங்கிப் பின்பு அவை மரணம் எனும் கனியாகப் பழுத்து உதிர நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் பயனின்றிக் கணப்பொழு தில் இறந்தொழிகின்றார்கள். அற்புதமான இவ்விளக் கத்தை நம் உள்ளத்தில் அமைத்துப் பயன்பெற வேண் டியது நம்மனோர் கடன். இங்ங்னம் இதன்கண் கொண்ட உழவரது அரிய முயற்சியாக அடிகள் வெளியிட்டருளிய செய்திகள். மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே" என்ற நாவுக்கரசரின் திருப்பாடலுக்குச் சிறந்த விளக்கவு ரைப் பகுதியாக அமைந்துள்ளமை ஒப்புநோக்கி 9. அப்பர் தேவாரம 4 72:2