பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் $ 43 & உணரத் தகுவதாகும். நாவுக்கரசர் பெருமான் தொண்டு செய்வதில் சிறந்த உழவராகத் திகழ்ந்தவர்; உழவாரப் படையைத் தாங்கிக் கொண்டு திருக்கோயில்களில் திருப் பணி செய்து திகழ்ந்ததையும் நினைவு கூர்தல் வேண் டும். மேவிய புன்மயிர் (13) எனத் தொடங்கும் திருப்பா டலில் உயிர் எவ்வியல்பினது என ஆராயப் புகுந்து தத்துவ சோதனை செய்து தம்மியல்பினை உணராது வருந்திய அடிகள், இறைவனது திருவருள் நாட்டம் பெற்றவுடன் உயிராகிய தம்மையும் இறைவனையும் உணரப் பெற்ற திறத்தை விரித்துரைக்கின்றார். 'நாடி, எலும்பு, நரம்பு முதலிய உடல் உறுப்புக ளுள் உயிராகிய யான் யார்?’ என்று என்னைத் தேடிப் பார்த்தும் என்னைத் தெளிய அறிந்து கொண்டேன் அல்லேன். இவ்வாறு தம்மைப் பற்றி ஆராய்ந்தறிகின்ற ஆராய்ச்சி அறிவின் கண்ணே இதனைத் தெரிவிப்பதா கிய அறிவு வேறு உண்டென்று ஆராய்ந்து நோக்கி அவ்வாறு நாடுங்கால் விளங்கித் தோன்றும் இறைவனது திருவடி ஞானத்தால் அம்முதல்வனையும் உணர்ந்து அவனது பேரறிவினுள்ளே தாம் அடங்கி நின்று அங்க னம் அறியும் பொருளாகிய தம்மையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அங்ங்னம் உணரும் பயிற்சி பெறாதார் உயிராகிய தம்மை அறியவல்லுநர் அல்லர் என்பதனை, நாடியோ என்போ நரம்புக் கோழையோ தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடிஅரன் தன்னாலே தன்னையும் கண்டு தமைக்கானார் என்னாம் எனஅறிவார் இன்று. எனவரும் வெண்பாவில் ஆசிரியர் மெய்கண்ட தேவநாய னார் தெளிவாக விளக்கியுள்ளார். இவ்வெண்பா திருவி டைமருதுர் மும்மணிக் கோவையில் வரும் மேவிய