பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 44 + பட்டினத்தடிகள் புன்மயிர்த் தொகையோ (13) என்ற முதற் குறிப்புடைய திருப்பாடற் பொருளை அடியொற்றி அமைந்ததென் பது இவ்விரு செய்யுட்களையும் ஒப்புநோக்கி உணர் வார்க்கு இனிது விளங்கும் 'நின்னைக் காணா மாந்தர், தன்னையும் காணாத் தன்மையோரே' என ஒதியவாற் றான் ஏனைப் பசு பாசங்களும் சிவஞானத்தாலன்றி அறியப்படாவென்பது போதரும்' என்றும், 'ஆன்மா பிற உயிர்களைத் தனித்த முதலாய்ப் பிரித்தறியுமாறு இல்லையாயினும் சிவத்தைத் தரிசிக்கும்வழித் தான் அதுவாய் நின்று தன்னை அறியுமாறு போலப் பிற உயிர்களையும் அச்சிவத்தின் வண்ணமாய்க் கண்டறி தல் அமைவுடைத் தென்பது, என்னையும் கண்டேன் பிறரையும் கண்டேன் நின்னிலை யனைத்தையும் கண்டேன் என்னே நின்னைக் காணா மாந்தர் தன்னையும் காணாத் தன்மை யோரே' என்பதனாற் புலனாம்’ என்றும் சிவஞான முனிவர் இப்பாடற் பொருளை இனிது விளக்கியுள்ளார். சிவரு பத்தால் ஆன்ம தரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று இப்பாடல் எனக் கொள்ளு தல் பொருந்தும். சிவபெருமானை நினையாமலும் திருவைந்தெழுத் தினை ஒதாமலும் பச்சிலையும் நீருங்கொண்டு வழிபாடு செய்யாமலும் வேறு யாராகவோ நினைக்கும் புறச் சமயத்தாருள்ளத்திலும் இடை மருதீசன் பொன்னார் திருவடியே நண்ணி அருள் வழங்கும் ஆறு சமயத்தார் செய்யும் வழிபாடுகளெல்லாம் இடைமருதீசன் ஒருவ னையே வந்து சார்வன என்னும் உறுதியுடையவர் திருவெண் காட்டடிகள் என்பது, 10. திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 13