பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 45 + ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ எண்ணுவார் உள்ளத்து இடைமருதர் பொற்பாதம் நண்ணுவாம் என்னுமது நாம், (14) அன்றென்றும் ஆம்என்றும் ஆறு சமயங்கள் ஒன்றொன்றோடு ஒவ்வாது உரைத்தாலும் - என்றும் ஒருதனையே நோக்குவாள் உள்ளத்து இருக்கும் மருதனையே நோக்கி வரும். (17) எனவரும் மும்மணிக்கோவை செய்யுட்களால் இனிது புலனாம். இப்பாடல்கள், எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயெல்று அருள்புரியும் எம்பெருமான்' என ஆளுடைய பிள்ளையாரும், 'விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம்செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" 'ஆறுசமயத்து அவரவரைத் தேற்றும் தகையன்’ ஆமொருவர் உள்குவார் உள்ளத்து உள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் " 11. சம்பந்தர் தேவாரம் 2.40:6 12. நாவுக்கரசர் தேவாரம் 4.60 9 13. மேலது 14. மேலது - 6.18:11