பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 49 + ஞானநெறி இதுவென உணர்ந்திலேன். சரியை கிரியை யாகிய கைத் தொண்டு செய்து நின்கழல் போற்றும் அடியார்கள் தொண்டினை உவந்து மேற்கொண்டேன் அல்லேன். உடல் வளர்க்கும் உணவினையே விரும் பிப் பொய்யேயுன்னைப் போற்றிப் புறமே திரியும் இத்தொண்டனேனாகிய எளியேனது பணியையும் ஏற் றுக் கொள்வாயோ?” என அடிகள் கச்சி நகர் ஏகாம்பரப் பெருமான் திருமுன்னின்று குறையிரந்து வேண்டுவதாக அமைந்தது, மெய்த்தொண்டர் செல்லும் நெறிஅறி யேன்மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே (1) என வரும் இத்திருவந்தாதியின் முதற் பாடலாகும். தரித்தேன் மனத்துள் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய் வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையை அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச் சிரித்தேன் உனக்கடி யார்அடி பூணத் தெளிந்தனனே (3) தெளிதரு கின்றது. சென்றென் மனம்நின் திருவடிவம் அளிதரு நின்அருட்கு ஐயம் இனியில்லை அந்திச்செக்கர் பட்டி-5