பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 51 + நெற்றியில் அணிந்து அப்பெருமானை வழிபாடு செய் யாராயின் அம்மன்னரது அரசியலாட்சியும் அவர்தம் வீரம், நீதி, கொடை முதலியவற்றுக்கு அடையாளமாக முழங்கும் முரசும் இவ்வுலகில் நிலை பெறா என்பதனை, அன்றும் பகைஅடர்க் கும்பரி மாவும் மதஅருவிக் குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ் நன்றும் பொலியினுங் கம்பர்நன் னிறு நுதற்கிலரேல் என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே (30) என்ற திருப்பாடலால் நமக்குக் காட்டுவர். அடிகள் காலத்தில் தமிழக மன்னர்கள் எந்நெறியையும் கடைப் பிடித்தொழுகாததால் அடைந்த தோல்வியையும் சிவநெ றியைக் கடைப்பிடித்தொழுகியவர் அடைந்த வெற்றி யையும் குறிப்பிடுவதை அறிந்து மகிழ்கின்றோம். நிலத்தேவர் எனப் போற்றப்பெறும் தலைமை யைப் பிறப்பினால் அடைந்து மறைகளை மறவாது ஒதி வேள்விகளை முறைப்படி செய்து வந்தாலும், திருவே கம்பப் பெருமானைப் பண்டைக் குலத்தை மறந்த தொண்டர்களோடும் கூடித் தொழும் திருவருள் நலம் வாய்க்கப் பெறாதவர்கள் காடுகளில் வேட்டையாடித் திரியும் வேடுவர்களோடு வைத்து எண்ணப்படும் தாழ் வுடையவராவர். தமது இக்கருத்தினை, நிலத்துஇமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம் வலத்துஇமைப் போதும் பிரியார் எரிவளர்த் தாலும்வெற்பன் குலத்துஉமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும்