பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 52 + பட்டினத்தடிகள் நலத்து.அமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே (31) என்ற திருப்பாடலில் அமைத்துக் காட்டுவர். சீலமின்றி அறிவின்றிக் கொலை களவு முதலிய தீமை புரிந்தொழுகும் கீழ்ச்சாதி மக்களாயினும் ஏகம்ப வாணனாகிய இறைவனுடைய திருவடிக்கு அன்பு டைய தொண்டராயின் அவர்களே யாவர்க்கும் மேலா கிய உத்தமராகப் போற்றத்தக்கவர்களாவர். இக்கருத் தினை அடிகள், படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும் கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களைஆள் உடையான் கழற்குஅன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே (32) என்ற பாடலில் பெய்து காட்டுவர். இறைவன் அடிக்குத் தொண்டு பூண்டு ஒழுகுபவர் முன்னர் எத்தகைய குற்ற முடையவராயினும் அவர்கள் இறைவனுக்கு ஆட்பட்ட பின்னர் அக்குற்றங்களையெல்லாம் எரிமுன்னர்ப் பஞ்சு போலத் தீய்ந்து நீறாக, எல்லா நற்பண்புகளும் பெற்று மேம்படுவராதலின் 'ஆளுடையான் அடிக்கு அன்பரேல் அவர் யாவர்க்கும் உத்தமரே என்றார். இத்திருப்பாடல், அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே (6.95:10) என்ற நாவுக்கரசர் பெருமான் அருளிய பொன்னுரை