பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 56 & பட்டினத்தடிகள் வனை வழிபட்ட காலத்துப் பெருவெள்ளம் பெருக்கெ டுத்து வரக்கண்டு அஞ்சித் தான் வழிபடும் சிவலிங்கத் திருமேனிக்கு ஊறு நேராவண்ணம் தழுவிக் கொள்ள, அந்நிலையில் உமாதேவியாரது தனத்தழும்பும் வளைத் தழும்பும் தன் மேனியில் விளங்கச் சிவபெருமான் குழைந்து காட்டிய பேரன்பின் திறத்தைத் தன்னுடன் வரும் தலைவிக்கு எடுத்துரைத்து இத்தகைய திருவே கம்பத் திருக்கோயிலை இறைஞ்சப் பெற்றமையால் இவ்வுலகில் மக்கட் பிறப்பினால் அடைதற்குரிய பெரும் பயனை நாம் பெற்றுள்ளோம்’ என மகிழ்ந்து ரைப்பதாக, தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஒடித் தமைத்தழுவக் கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார் வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி உளரா வதுபடைத் தோம்மட வாய்.இவ் வுலகத்துளே (85) என்ற பாடல் அமைந்துள்ளது. அன்பின் திறத்தால் பிரிவின்றி உடன் சென்ற காதலர்கள், பிரியா நங்கையா கிய பெருமாட்டியார் வழிபட அன்பேயுருவாகிய பெரு மான் அவர்க்கு அருள்செய்த திருக்கோயிலாகிய திரு வேகம்பத்தைக் கண்டு வழிபட்டு மகிழ்ந்த திறம் இத்தி ருப்பாடலில் இனிது புலனாதல் கண்டு மகிழலாம். (5) திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது: திருவொற்றி யூரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெரு மானது பொருள் சேர் புகழை விரித்துரைக்கும் இப்பனு வல் அந்தாதித் தொடையாலமைந்த பத்து ஆசிரியப் பாக்களால் அமைந்தது. பத்துப் பாடல்களும் ஒற்றியூர் இறைவனை முன்னிலைப்படுத்திப் போற்றுபவை.