பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் # 59 + மெய்யுணர்வுடையோர் கொள்ளார்கள். இவ்வுண்மை யினை, உருவாம் உலகுக் கொருவ னாகிய பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின் எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின் அப்பொருள் உனக்கே அவயவ மாதலின் முன்னிய மூவெயில் முழங்கெரி யூட்டித் தொன்னி வையகந் துயர்கெடச் சூழ்ந்ததும் வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும் நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும் ஓங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும் பூங்கனை வேளைப் பொடிபட விழித்ததும் திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும் குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும் என்றிவை முதலா ஆள்வினை எல்லாம் உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர! பகர்வோர் நினக்கு வேறின்மை கண்டவர் நிகழ்ச்சியின் நிகழின் அல்லது புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே (3) என்ற பாடலில் அடிகள் தெளிவாக விளக்கியருளிய திறம் அறிந்து வியந்து மகிழத்தக்கதாகும். இறைவனாகிய மெய்ப்பொருளை உணர முற் பட்டு உயர்ந்த நான்முகன் முதலாக அறியாமையாகிய இருளொடு ஒற்றித்து நின்று யாக்கையுட்பட்டு வாழும் எல்லா உயிர்களும், உருவம், உணர்வு, பெருமை, ஆற்றல், செல்வம், வன்மை, செய்யும் தொழில் வகை ஆகியவற்றால் வேறுபட்டனவாகி வினைத் தொடர்பி னின்றும் நீங்காது ஒன்றையொன்று ஒவ்வாதனவாய்க் கூடி நிற்பது இவ்வுலகத் தொகுதி. இதன்கண் வாழும் உயிர்களின் ஒழுகலாறுகள், நிலைபெற்ற பெருங்கட லுள் உயர்ந்து தோன்றும் அலைகளைப் போன்று