பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vị பினரே. மூன்று பட்டினத்தாரில் இவர் ஒருவரா? அன்றி நாலாமவராகக் கொள்ளத்தக்கவரா என்ற வினாவும் எழுகிறது. திருவொற்றியூருக்குப் பதினொராந் திருமுறைத் திரு வெண்காட்டடிகள் பாடலும் உண்டு. பாடல் திரட்டுப் பட்டி னத்தார் அந்தாதியும் உண்டு. ஆதலால் மூவரில் அல்லது நால்வரில் எந்தப் பட்டினத்தாருக்கு உரியது ஒற்றிக் கடற்க ரைத் திருக்கோயில்? நமக்குத் தெளிவு கிடைக்கவில்லை. தமிழர்கள் வரலாற்றுணர்வு பெற வாழ்ந்திருந்தால் இந்தச் சிக்கல்கள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் யாவர் வரலாறும் ஒன்றாய் இணைந்த பஞ்சாமிருதக் கலவை வர லாறு கேட்கச் சுவையாக ஒருவர் வரலாறாகவே இன்றளவும் கொள்ளப் பெறுகிறது. நிற்க. பட்டினத்தார் முதலிருவர் வரலாறுகள் சிவநேயச் செல் வர் வரலாறாகத் திகழ்கின்றன. மூன்றாமவர் சித்த புருடராகத் தெரிகிறார். சித்தர்கள் வாலை (சத்தி) வழிபாட்டுக்காரர்கள். நாலாமவர் மூனறாமவரின் சீட பரம்பரையினராகக் கொள்ளத் தக்கவர். "ஞானம்' என்ற சொல் ஆசிரியர் ஒருவர் பெயரை அடுத்து வருமானால் அம்முதலாசிரியரின் சீட பரம்பரையில் சந்தானமாகப் பெற்ற ஞானம் என்ற பொருளே தரும். சித்தர் நூல்களில் 'காகபுஜண்டர் ஞானம்', 'திருவள்ளுவர் ஞானம்' முதலியன காண்க. பட்டினத்தடிகள் வரலாறுகளை ஆராயும்போது முதலாம வர் இராஜராஜன் காலத்துக்கு முற்பட்டும், வரகுண பாண்டி யர் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டும் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். இரண்டாமவர் பத்தாம் நூற் றாண்டுக்குப் பின்னரும் பதினாலாம் நூற்றாண்டுக்கு முன்னும் வர்ழ்ந்தவர் எனலாம். மூன்றாமவர் அதற்குப் பின்னர் வாழ்ந் திருத்தல் கூடும்.