பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 62 + பட்டினத்தடிகள் பாசப் பிணிப்பினை நீக்கி அருள் புரிவாயாக’ என ஒன்பதாம் பாடல் உணர்த்துகின்றது. அடிகள் இறை வனை வேண்டும் முறை படிப்போர் உள்ளத்தை உருக் குவதாகும். இறைவனது மெய்ப்புகழைப் போற்றிப் பரவுவதாக அமைந்தது இப்பனுவலின் பத்தாம் பாடலா கும். இது திருவாசகத்திலுள்ள போற்றித் திருஅகவலை யொத்து அமைந்துள்ளது. திருவாசகம் முதலிய முன் னைத் திருமுறைகளில் திருவெண்காட்டிகள் கொண் டுள்ள பேரார்வம் அவர் பாடியுள்ள செழும் பாடல்க ளால் நன்கு புலனாகும். காலற்ற சீரிய கழலோய் போற்றி” என்று தொடங்கி 'குமரா போற்றி கூத்தா போற்றி, பொருளே போற்றி போற்றி என்று முடித்து உன்னை, நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது ஏத்துதற் குரியோர் யார்இரு நிலத்தே (10) என்று நிறைவு செய்வது கண்டு இதனை உணர்ந்து மகிழலாம்.