பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 64 + பட்டினத்தடிகள் கின்றார். இனி இப்பாடல்களில் விரிவாக ஆழங்கால் பட்டு அநுபவிப்போம். பக்திக் கடலிலும் திளைப் போம். 1. கோயில் அகவல்: அகவல்கள்: ஈண்டு மூன்று அகவல்கள் உள்ளன. கோயில் திருத்தில்லை அல்லது சிதம்பரம். நான்காவது 'கச்சித் திருஅகவல்'; இது காஞ்சியைப் பற்றியதாகும். முதல் அகவல்: இது 47 அடிகளைக் கொண்டது. பிறவியைப் பழித்து 'செம்பொன் அம்பலவனை நினை மின் மனனே' என்று உபதேசிப்பது. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்; பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்; புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்; அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்; உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம் (શ્રાવ 6-12) இவை பிறப்பின் இழிவினை எடுத்து ஒதுவன. பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும்; அனைத்தும்நினைக் கொன்றன; தின்றனை அனைத்தும்; அனைத்தும்நினைத் தின்றன; பெற்றனை அனைத்தும்; அனைத்தும்நினைப் பெற்றன; ஓம்பினை அனைத்தையும்; அனைத்தும்நினை ஓம்பின; செல்வத்து இருந்தனை, தரித்திரத்து அழுங்கினை சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை (அடி 14-19) இவை வாழ்க்கை வட்டத்தில் நிலையாமையை நினை வூட்டுவன. புற்புதக் குரம்பை, துச்சில் ஒதுக்கிடம்; என்னநின்று இயங்கும் இடுவினைக் கூட்டமை