பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் 4 65 % கல்லினும் வலிதாக் கருதினை; இதனுள் பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி, மீளும் குறும்பி வெளிப்படும் ஒருபொறி, சளியும் நீரும் தவழும ஒருபொறி, உமிழ்நீர்க் கோழை ஒழுகும் ஒருபொறி, வளியும் மலமும் வழங்கும் ஒருபொறி, சலமும் சீயும் சரியும் ஒருவழி, உள்உறத் தொடங்கி வெளிப்புறம் நாறும்; சட்டகம் முடிவில் சுட்ட எலும்பாகுக (estą 23-33) இவை உடலின் இழிவை எடுத்து இயம்பி விளக்குபவை. இங்ங்ணம் அமைந்துள்ள உடல்உறு வாழ்க்கையை வெறுத்தொதுக்குமாறு அறவுரை கூறுவர் அடிகள். அடுத்து, கடிமலர்க் கொன்றை சடைமுடிக் கடவுளை ஒழிவுஅருஞ் சிவபெரும் போக இன்பத்தை நிழல்எனக் கடவா நீர்மையொடு பொருந்தி எனதுஅற நினைவுஅற இருவினை மலம்அற வரவொடு செலவுஅற மருள்அற இருள்அற இரவொடு பகல்அற இகபரம் அறஒரு முதல்வனைத் தில்லையுள் முளைத்துஎழும் சோதியை அம்பலத்து அரசனை ஆனந்தக் கூத்தனை நெருப்பில் அரக்கென நெக்குநெக்கு உருகித் திருச்சிற் றம்பலத்து ஒளிரும் சிவனை நினைமின் மனனே நினைமின் மனனே (அடி 34-45) என்ற அடிகளில் செம்பொன் அம்பலவனைச் சிந்தை யில் இருத்தி வழிபடுமாறு அறிவுரை புகல்வர். இரண்டாம் அகவல்: இது 38 அடிகளைக் கொண் டது. யாக்கையை பழித்து பெருமானே, இவ்யாக்கை நிலையற்றது. அடியேனுக்கு உன் ஆனந்தத் தாண்ட வம் காட்டி ஆட்கொள்க' என்று வேண்டுவது. பட்டி-6