பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 66 & பட்டினத்தடிகள் ஐவர் கலகம்இட்டு அலைக்கும் கானகம் சலமலப் பேழை இருவினைப் பெட்டகம் வாதம்பித் தம்கோழை குடிபுகும் சீறுர் (அடி 7-9) என்று உடலை அறிமுகம் செய்த அடிகள் அதன் இயல்பை, ஊற்றைப் புன்தோல் உதிரக் கட்டளை நாற்றப் பாண்டம் நான்முழத்து ஒன்பது பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம் (அடி 10-12) என்றும், ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம் ஓயா நோய்க்குஇடம் ஓடும் மரக்கலம் மாயா விகாரம் மரணப் பஞ்சரம் சோற்றுத் துருத்தி தூற்றும் பத்தம் காற்றில் பறக்கும் கானப் பட்டம் (அடி 14-18) என்றும், சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை ஈமக்கனலில் இடுசில விருந்து காமக் கனலில் கருகும் சருகு (அடி 20-21) என்றும், பவக்கொழுந்து ஏறும் கவைக்கொழு கொம்பு மணமாய் நடக்கும் வடிவின் முடிவில் பிணமாய்க் கிடக்கும் பிண்டம் பினமேல் ஊரில் கிடக்க ஒட்டா உபாதி (அடி 24-27) என்றும், அந்தரத்து இயங்கும் இந்திர சாபம் அதிரும் மேகத்து உருவின் அருநிழல் நீரில் குமிழி நீர்மேல் எழுத்து