பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 68 + பட்டினத்தடிகள் பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும் முக்குண மடமையும் ஐம்பொறி முயக்கமும் இடும்பையும் பிணியும் இடுக்கிய யாக்கை (அடி 9-19) என்று உடல் காட்டப் பெறுகின்றது. இந்த உடலில் 'உயிர்' எனும் குருகு வாழ்கின்றது. அதுவும் உடலை விட்டுப் பறந்து விடுகின்றது. இத்தகைய உடலின் இழிநிலை மேலும் காட்டப் பெறுகின்றது. உயிர்எனும் குருகுவிட்டு ஓடும் குரம்பையை மலஉடல் குடத்தைப் புலவுஉடல் புட்டிலைத் தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் கொலைப்படைக் கலம்பல கிடக்கும் கூட்டைச் மாப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக் கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியைக் கோபத்தீ மூட்டும் கொல்லன் துருத்தியை ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தைப் புலராக் கவலை விளைமரப் பொதும்பை ஆசைக் கயிற்றில் ஆடுபம் பரத்தைக் காசில் பணத்தில் சுழலும்காற் றாடியை மக்கள் வினையின் மயங்கும் திகிரியைக் (அடி 20-34) என்று அதன் இயல்பு விளக்கப் பெறுகின்றது. இத்த கைய இழிவான உடலின்மீது கருத்தைச் செலுத்தாது, உயிர் உடலை விட்டுப் பிரியும்போது, அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம் வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழும் கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம் இமையா நாட்டத்து இறையே அடைக்கலம் அடியார்க்கு எளியாய் அடைக்கலம் அடைக்கலம் மறையவர் தில்லை மன்றுநின்று ஆடிக் கருணைமொண்டு அலையெறி கடலே அடைக்கலம்