பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vil முதல் பட்டினத்தாரைச் சிலர் வேளாண் மரபினர்' என்பர். இரண்டாவது பட்டினத்தார் வணிகர்' என்று கூற இடம் உண்டு. வித்தாரம் பேசினும் சோங்கு ஏறினும் கம்பமீதிருந்து தத்தா என்றோதிப் பவுரிகொண்டாடினும்..... என்னும் பாட்டில், சோங்கு - மரக்கலம் என்று பொருள்படும். நடைமுறையில் வழங்கும் கதைகள் பட்டினத்தாரை வணிக மரபினர் என்பதற்கு இது துணையாக நிற்குமேயன்றி இந்த ஒரு காரணம் பற்றி அவரை வணிகர்' என்று துணிந்து கூறவும் முடியாது. தாயுமான அடிகள் பட்டினத்தாரைப் பாராட்டும் அடிகள் இங்கு நினைக்கத்தக்கன. “பாரனைத்தும் பொய்யெனவே - பட்டினத்துப் பிள்ளையைப்போல், ஆரும் துறத்தல் அரிது அரிது" என்பதில் இரண்டு செய்திகள் புலனாகின்றன. பட்டினத்தாருக் குப் பிள்ளையார்' என்ற திருநாமம் உண்டு. அவர் மிகப் பெருஞ்செல்வம் உடையவராயிருந்தார். வணிகர் பெருஞ் செல்வர் உடையராயிருத்தல் இயல்பு. அவர் ஒரு கணத்தில் அச்செல்வத்தை வெறுத்துத் துறந்தவர் என்பது விளங்குகின் நிது. இன்னொரு பாட்டில் பட்டினத்தார் பத்திரகிரி பண்புணர் வதெந்நாளோ?' என்பதனால் பட்டினத்தடிகளும் பத்திரகிரி யாரும் மிக்க கேண்மையுடையவர்களாயிருந்தார்கள் என்பது குறிப்பால் புலப்படுகிறது. ஆனால், உஜ்ஜயினி என்ற மத்திய இந்தியப் பகுதியை ஆண்டதாகக் கூறப்படும் பத்திரகிரியாரா இவர்? ஐயப்பாடே! சிருங்கார சதகம் முதலியவைகளை வடமொழியில் இயற்றிய அந்த பத்திரகிரியாரா இவர்?