பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 72 + பட்டினத்தடிகள் என்று தம் அறிவுரையை நிறைவு செய்கின்றார். சிற்றின் பத்தைக் கடிந்து பேரின்பத்திற்கு வழிகாட்டும் அற்புதத் திருப்பாடல் இது. 3. திரு.ஏகம்ப மாலை இது 'கச்சி ஏகம்பனே என விளித்து ஏகம்பநாத னைத் துதிக்கும் 40 கட்டளைக் கலித்துறை யாப்பா லான திருப்பாடல்களைக் கொண்டது. பாடல்கள் யாவும் மிக்க எளிமையானவை; எனினும் சிறப்பான பொருள் பொதிந்தவை. சிலவற்றில் ஆழங்கால் படு வோம். நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை ஆடி நயம்புரியும் தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னர்.ஆய்க் காயா மரமும் வறள்ஆம் குளமும்கல் ஆவும்என்ன ஈயா மனிதரை ஏன்படைத் தாய்கச்சி ஏகமப்னே (21) பிறந்துமண் மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்துசிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்குள் பறந்துஉழன் றேதடு மாறிப்பொன் தேடிஅப் பாவையர்க்கீந்து இறந்திட வோபணித் தாய்இறை வாகச்சி ஏகம்பனே (30) இவை இரண்டும் பிறப்பின் பாழ் நிலையைப் பேசி அடிகள் இரங்குவதைக் குறிப்பிடுகின்றன. பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும் தெருள்உடை யோரை முகத்தினும் தேர்ந்து தெளிவதுபோல்