பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 74 4. பட்டினத்தடிகள் சொக்குஇட்டு அரண்மனைப் புக்குஉள் திருடிய துட்டர்வந்து திக்குஉற்ற மன்னரைக் கேட்பது போல்சிவ நிந்தைசெய்து மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து வீடுஇச்சிக்கும் எக்குப் பெருந்தவர்க்கு என்சொல்லு வேன்கச்சி ஏகம்பனே (35) விருந்தாக வந்தவர் தங்களுக்கு அன்னம் மிகக்கொடுக்கப் பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப் போற்றிநித்தம் அருந்தா முலைபங்கள் என்னாத பாதகர் அம்புவியில் இருந்தாவது எதுகண் டாய்இறை வாகச்சி ஏகம்பனே (36) கடுஞ்சொல்லின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக் கொடும்பாவ மேசெயும் நிர்மூடர் தம்மைக் குவலயத்து நெடும்பனை போல வளர்ந்து நல்லோர்தம் நெறியறியா இடும்பரை ஏன்வகுத் தாய்இறை வாகச்சி ஏகம்பனே (39) என இந்த ஐந்து பாடல்களிலும் பல்வேறுபட்ட இயல்பு கள் கொண்ட மக்களைக் காட்டி அவர்கள் நிலைக்கு அடிகள் இரங்குவதையும் அவர்கள் படைப்புக்கு வருந் துவதையும் காண்கின்றோம். ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த பீற்றல் துருத்தியைச் சோறிடும் தோற்பையைப் பேசரிய