பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் § 77 & என்ற இத்திருப்பாட்டில் பல்வேறு கவலைகள் பகரப் பெறுகின்றன. தொடர்ந்து, நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலைஉள தோஅக மும்பொருளும் இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழில் உடம்பும் எல்லாம் வெளிமயக் கேஇறை வாகச்சி ஏகம்பனே. (5) என்ற பாட்டில் சிலவற்றைத் தவிர பிறவெல்லாம் 'வெளி மயக்கே என்று கூறி நிலையாமை நாட்டத்தை சூசுப்பிக்கின்றார். அறந்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம்இல்லம் துறந்தான் அவனில் சதகோடி உள்ளத் துறவுஉடையோன் மறந்தான் அறக்கற்று அறிவோடு இருந்துஇரு வாதனைஅற்று இறந்தான் பெருமையை என்சொல்லு வேன்கச்சி ஏகம்பனே (1) ஊரும் சதமல்ல உற்றார் சதம்அல்ல உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல பெண்டிர் சதம்அல்ல பிள்ளைகளும் சீரும் சதம்அல்ல செல்வம் சதம்அல்ல தேசத்திலே யாரும் சதம்அல்ல நின்தாள் சதம்கச்சி ஏகம்பனே (13) என்ற பாடல்களைப் படித்து அநுபவிக்கும்போது,