பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 80 + பட்டினத்தடிகள் நல்லாய் எனக்கு மனுஒன்று தந்தருள் ஞானம்இல்லாப் பொல்லா எனைக்கொன்று போடும் பொழுதுஇயல் பூசைசெபம் சொல்லார் நல்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும் எல்லாம் முடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி ஏகம்பனே (32) என்ற இந்த மூன்று பாடல்களால் சில வேண்டுகோள் களை விடுப்பதை அறிய முடிகின்றது. இறுதியாக அடிகள் பெண்களை இழிவுபடுத்திப் பாடுவதுதான் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றது. கைப்பிடி நாயகன் துங்கையி லேஅவன் கையைஎடுத்து அப்புறம் தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்து உறங்குபவளை எப்படி நான்நம்பு வேன்இறை வாகச்சி ஏகம்பனே (3) காதுஎன்று மூக்குஎன்று கண்என்று காட்டிஎன் கண்எதிரே மாதுஎன்று சொல்லி வரும்மாயை தன்னை மறலிவிட்ட தூதுளன்றுஎண் ணாமல் சுகம்என்று நாடும்.இத் துர்ப்புத்தியை ஏதுஎன்று எடுத்துரைப் பேன்இறை வாகச்சி ஏகம்பனே (12) சீறும் வினையது பெண்உரு ஆகித் திரண்டுஉருண்டு கூறும் முலையும் இறைச்சியும் ஆகிக் கொடுமையினால்