பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பட்டிமண்டபம்

காண முடியவில்லை. பல துண்டு துக்கடாக்களை ஒன்று சேர்த்துக் காப்பியம் ஆக்க முயன்றிருக்கிறார் சாத்தனார். ஆனால் வெற்றி காணவில்லை. இந்த நிலையில் அதில் காப்பியத் தலைவனையோ அல்லது தலைவியையோ காண இயலாது போவது அதிசயமன்று. சிந்தாமணியில் வரும் சீவகனோ தமிழ்ப் பண்புக் கெல்லாம் ஒவ்வாதவ னாக இருக்கிறான். ஒருவனும் ஒருத்தியுமாக வாழ்ந்த தமிழகத்தில் செல்லுமிடங்களில் எல்லாம் ஒவ்வொரு பெண்ணாக மணந்து எட்டுப் பெண்களின் நாயகனாக இருப்பவனைக்காவிய நாயகன் என்று கூறுவது பொருத்த மில்லை. இந்த நிலையில் இவர்களுக்குப் பின்னர் காப்பியம் பாடிய கவிஞன் கம்பன். அவனது காவியம் ராமன் என்னும் லட்சிய புருஷனைச் சுற்றிச் சுழல்கிறது. காப்பிய நாயகனாக இருக்க எல்லாத் தகுதியும் பெற்றவ னாக ராமன் விளங்குகின்றான். ஒரு காப்பிய நாயகனுக்கு இருக்க வேண்டிய அழகு, அறிவு, ஆற்றல் எல்லாம் நிறைந்தவனாக இருக்கிறான். அந்த அழகு, அறிவு, ஆற்றலை எல்லாம் கவிச்சக்கரவர்த்தி கம்பன் சிறப் பாகவே எடுத்துக் கூறுகிறான். அப்படிக் கம்பன் உரு வாக்கும் காப்பியத் தலைவனாகிய ராமனிடத்து மிகச் சிறப்பாக இருப்பது அவனது அழகா, அறிவா, ஆற்றலா என்பது இன்றைய பட்டி மண்டபத்தில் நடக்கும் விவாதம். கம்பன் காவியத்தை நன்றாகப் படித்துச் சுவைத்த ஒன்பதின்மர் கலந்து கொண்டு விவாதித்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் கட்சிக்கு வேண்டும் ஆதாரங்களை எடுத்துக் கூறித் தங்கள் கட்சியை நிலைநாட்ட முயன்றிருக்கிறார்கள். இவர்களுடைய ஆற்றல் பாராட்டுக்குரியது. -

காவிய நாயகனான ராமன் முதல் நூலாம் வான்மீகத்தி லும் வழி நூலாம் கம்ப இராமாயணத்திலும் நல்ல கரிய