பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 99

நிறமுடையவனாகவே வர்ணிக்கப்படுகிறான். நீலமேக சியாமளவண்ணனான ராமனை அலையாண்டு அமைந்த மேனி அழகன்' என்றே அழகாகக் குறிப்பிடுகின்றான் கம்பன். கறுப்பிலே ஒரு அழகு - குளிர்ச்சியிலே ஒரு ருசி" -என்ற பழமொழியை அடி ஒற்றிக்கூறியிருக்கிறான் என்று மட்டும் கொள்ள முடியுமா? இல்லை, உண்மையிலேயே ராமன் அழகு வாய்ந்தவன் தானா? ராமனை மிதிலை மன்னனாம் ஜனகனிடம் அறிமுகப்படுத்தும்போது விசுவாமித்திரன், இருங் கடகக் கரதலத்து எழுதரிய திருமேனிக் கருங்கடல் - என்றே வர்ணிக்கிறான். இந்த ராமனைத்தான் மதனர்க்கும் எழுத ஒண்ணா அழகுடைய சீதை தன் கன்னி மாடத்திலிருந்து கண்டு காதல் கொள் கிறாள். அவள் ராமனது அழகை அனுபவித்ததைக்கம்பன் சொல்கிறான்.

இந்திரநீலம் ஒத்து

இருண்டகுஞ்சியும் சந்திரவதனமும்

தாழ்ந்த கைகளும் சுந்தர மணி வரைத் தோளுமே அல முந்தி என் உயிரை

அம் முறுவல் உண்டதே

என்பது சீதையின் கூற்று. இப்படிக் கண்டு காதலுற்ற கன்னி, கண் வழி நுழைந்த அக் கள்வனாம் ராமனது அழகில் ஈடுபட்டு நின்றதில் வியப்பில்லை. மிதிலை நகரிலே ராமன் உலா வந்தபோது வீதியில் உள்ள வீடு களில் பெண்கள் எல்லாம் தலைவாயிலுக்கே ஓடிவந்து ராமனைக் கண்டு அவனது அழகில் மெய் மறந்து நிற்கிறார்களே! அதைச் சொல்கிறானே, கம்பன் மிகவும் அழகாக,