பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பட்டிமண்டபம்

தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்

தடக்கை கண்டாரும் அஃதே! வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத்து அன்னான்

உருவு கண்டாரை ஒத்தார் இப்படி அவனது ஒவ்வொரு அங்க அழகிலும் ஈடுபட்டு நின்றதிலிருந்தே அவன் சர்வ அங்க சுந்தரனாக இருக்கிறான் என்பது பெறப்படுகிறதே! -

சீதையும், மிதிலை நகரத்துப் பெண்களும் அவன் அழகில் ஈடுபட்டு நிற்பது வியப்பில்லை. பஞ்சவடிவிலே காமரூபியாம் கன்னி வடிவில் வந்த சூர்ப்பனகை ராமனது அழகிற்கு எல்லை என்பதே இல்லையே என்று மயங்கு கிறாள். பின்னர் இராவணன் முன்னிலையில் தன் உருவெளித் தோற்றத்தில் கண்ட ராமனை

செந்தாமரைக் கண்ணோடும்

செங்கனி வாயினொடும் சந்தார் தடம் தாளொடும்

தாள் தடக்கைகளோடும் அம்தார் அகலத்தோடும்

அஞ்சனக் குன்றம் என்ன வந்தான் இவனாகும்

அவ்வல் வில் இராமன் - என்றல் லவா பாராட்டுகிறாள். ராமனது அழகை அவ்வளவு சிறப்பாகவல்லவா அனுபவித்திருக்கிறாள். இப்படி ராமசெளந்தர்யத்தை அனுபவித்தவர்களை