பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 104.

எல்லாம் கூறிக் கம்பன் கண்ட ராமனில் சிறப்பாயிருப்பது அவனது அழகே என்று வாதிட்டனர் ஒரு கட்சியார்.

ராமனது அழகு இருக்கட்டும் அதைவிட அவன் வீரம் என்ன குறைந்து விட்டது என்று ஆற்றலைப் புகழ வந்த கட்சியார் பேசினார்கள். கோதண்டம் ஏந்திய கையனாய் அவன் புறப்பட்டு விட்டால் அவனை எதிர்ப்பதற்குப் பகைவர்களே இல்லாது போய் விடுவார்களே.

வென்றிவாள் புடை விசித்து

மெய்ம்மை போல் என்றும் தேய்வுறாத் துணி

யாத்து இரு குன்றம் போல் உயர்ந்த

தோளில் கொற்றவில் ஒன்று தாங்கினான்

உலகம் தாங்கினான் என்று ராமன் வில்லேந்திப் புறப்படுகின்றதை கம்பன் மிகச்சிறப்பாகக் கூறுகிறான். இளவயதினனாக இருக்கிற போதே விசுவாமித்திரருடன் சென்று தாடகையை வதைக் கிறான். மாரீசன் கபாகுவை வாட்டுகிறான். பரசுராமனைக் கர்வபங்கமுறச் செய்கிறான். தண்டகாரண்யத்தில் கரதூஷணாதியர்களை எல்லாம் கொன்று குவிக்கிறான். இலங்கையில் நடந்த பெரும் போரில் இராவணாதியர் களை எல்லாம் நிர்மூலம் செய்கிறான். இத் தோடு அளவிலும் ஆற்றலிலும் மிகுந்த மூலபலமே போருக்கு வந்தபோதும் தன்னந் தனியனாய் அந்தப் பெரும் படையை எதிர்த்து நின்று வெற்றி காண்கிறானே, அந்த ஆற்றலை எல்லாம் எப்படிக் கணக்கிட? அன்றைய போர்க்களத்தில் அவன் வில்லில் கட்டிய மணிகள் வலிப்பதை,