பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பட்டிமண்டபம்

படுமத கரிபரி சிந்தின

பனிவரை இரதம் அவிந்தன விடுதிசைசெவிடு பிளந்தன

விரிகடல் அலரது எழுந்தன அடுபுலி அவுனர் தம் மங்கையர் அலர்விழி அருவிகள் சிந்தின கடுமணி நெடியவன் வெஞ்சிலை

கணகண, கணகண எனும்தொறும்

என்று பாடுகிறானே கம்பன், இப்படி வில்லேந்தி வீர முழக்கம் செய்யும் ராமனது ஆற்றல்தானே காவியம் முழுவதும் பேசப்படுகிறது - என்பது ஆற்றல் கட்சியாரது வாதம.

இத்தனை அழகும், ஆற்றலும் உடைய ராமனைக் கம்பன் நல்ல அறிவு படைத்த பெருமகனாகவும் காட்டு கிறான். தசரதன்தன் மந்திரக் கிழவர்களோடு ஆலோசனை செய்து ராமனுக்குப் பட்டம் சூட்ட எண்ணி ராமனை அழைத்து அந்தச் செய்தியைச் சொன்னபோது,

காதல் உற்றிலன், இகழ்ந்திலன்

கடன் இது என்று உணர்ந்தும் யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றே நீதி எற்கு என நினைந்தும்

அப்பணிதலை நின்றான்என்று கம்பன் அவன் அறிவுடைமையையும் அடக்கத்தையும் பாராட்டுகிறான். பின்னர் தனக்குப்படம் இல்லை என்று தெரிந்த போதும் கொஞ்சமும் வருத்தம் தெரிவிக்கவில்லை. அதையும் அப்பொழுது அலர்ந்த செந்திாமரை.போன்ற முகத்தோடேயே ஏற்றுக் கொள்