பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 103

கிறான். பின்னர்கோசலையிடம் பேசும் போதும், இலக்கு வனது சீற்றத்தை ஆற்றும் போதும், ராமன் தன் அறிவின் தெளிவை வெளிப்படுத்துகிறான். தன்னைத் தேடி வந்த பரதனிடத்து அரச தருமங்களை எடுத்துக் கூறி அவனை அயோத்திக்குத் திரும்பச் சொல்கிறானே அத்தனையும் சிறந்த அறிவுரைகள்தாமே. இப்படி எத்தனையோ இடத்து அவன் அறிவின் திறத்தைப் பார்க்கிறோம். அதனால் தான் கம்பன் அவனை அறிவின் உம்பரான் என்று பாராட்டிப் பேசுகிறான் என்று அறிவின் கட்சியார் வாதம்.

ராமன் அழகில் சிறந்தவன், ஆற்றல் உடையவன், அறிவு நிரம்பியவன் என்று நாம் அறிந்தாலும் கம்பன் கண்ட ராமனில் மிகச்சிறப்பாக இருப்பது அவனது அழகா அறிவா ஆற்றலா என்று தீர்மானிக்கவே இந்தப் பட்டி மண்டபம். ராமனை அறிவின் உம்பரான் என்று கம்பன் குறித்தாலும் அவனது நடவடிக்கைகள் அவனைச் சிறந்த அறிவுடையவன் என்று ஒப்புக் கொள்ளும்படி இல்லை. பஞ்சவடியில் மாரீசன் மாயமானாக வந்தபோது இலக்கு வன் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், மனைவி விரும்பு கிறாள் என்பதற்காக அம்மானை துரத்திச் சென்றானே, அது அறிவுடைய செயலாகுமா? அதனால்தானேசீதையை இராவணன் சிறை எடுக்கிறான். ஆய்ந்து உணர்ந்து பாராமல் செய்த காரியம் அல்லவா இது? பிற்காலத்துப் புலவர்கள்

மங்கை சொற்கேட்டு மன்னர் புகழ்

தசரதனும் மரணம் ஆனான் செங்கமலச் சீதை சொற்கேட்டு

ரீராமன் சென்றான் மான்யின்

என்றெல்லாம் பேசுவதற்கு இலக்காக்கிக் கொண் டானே தன்னை. இத்தோடு கிஷ்கிந்தையில் வாலி