பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பட்டிமண்டபம்

சுக்ரீவர்களுக்கு இடையே நேர்ந்த போரில், ர்ாமன் சுக்ரீவனுக்காக மறைந்து நின்று அம்பெய்து வாலியை வீழ்த்தி என்றுமே தீராத அபகீர்த்தியைத் தேடிக் கொண் டானே, அது அறிவுடைய செயலா? துஷ்ட நிக்கிரகத் திற்காகச் செய்தான் என்றால் நேரில் வாலியைப் போருக்கழைத்து வென்றிருக்கலாமே. அன்று வாலி பல பேசிய பின், -

செருக்களத்து உருத்து எய்யாதே வெவ்விய புளிஞர் என்ன

விலங்கியே மறைந்து வில்லால்

எவ்வியது என்னை

என்று கேட்டபோது வாயடைத்து நிற்கிறானே, இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே போதும், ராமனை அறிவு நிரம்பியவனாகக் கம்பன் கருதவில்லை என்று தீர்மானிக்க.

ராமன் ஆற்றல் மிகுந்தவன்தான். இராவணாதி வீரர் களை முடித்த ஆற்றலைச் சாமானிய ஆற்றல் என்று கூறிவிட முடியுமா? என்றாலும் கம்பனது கருத்தில் ராமனது ஆற்றல் மட்டுமா இந்தக் காரியங்களை எல்லாம் சாதித்திருக்கிறது? இந்திரசித்தன் இறந்து கிடந்தபோது வந்து புலம்புகின்ற தாயாம் மண்டோதரி,

அஞ்சினேன் அஞ்சினேன்

அச்சீதை என்னு அமிழ்தாற் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன்

நாளை இத்தகையன் அன்றோ -

என்று தானே புலம்புகின்றாள். ராம.வீரனது ஆற்ற லுக்குப் பக்கபலமாக சீதையின் கற்பும் நின்று உதவியிருக்