பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 105

கிறது என்றுதானே கம்பன் கருதியிருக்கிறான். ஆதலால் அவனது ஆற்றலும் தனித்து நின்று சிறந்து விளங்கக் காணோம். -

ஆனால் கம்பன் ராமனது அழகை வர்ணிக்கிற போதெல்லாம், அப்படியே விக்கித்து நிற்கிறான். காவிய நாயகனாம் ராமனை அந்தமில் அழகு உடையவனாக உருவாக்கிய கம்பன் கடைசியில் தானே அவன் அழகில் ஈடுபட்டு மெய்மறக்கிறான். ஒவியத்து எழுத ஒண்ணா உருவத்தான் என்பான் ஒரு முறை. பின் ஆடவரும் அவன் தோள்களைத் தழுவ அவாவுவர் என்பான் மறுமுறை. இப்படியெல்லாம் சொல்லியதோடு திருப்தி அடையாது

வெய்யோன் ஒளி தன்மேனியின்

விரி சோதியில் மறைய பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோ, மரகதமோ, மழை முகிலோ ஐயோ! இவன் வடிவு என்பதோர். அழியா அழகுடையான்- - என்றே முடிப்பான். ஐயோ!' என்று அவன் திணறுவதிலிருந்தே அவன் இராமனது அழகினை எப்படி அனுபவித்திருக்கிறான் என்று தெரிகிறது அல்லவா? ஆம் ராமனுடைய அழியா அழகினை அழியாத ஒவியமாக நிலை நிறுத்தி விடுகிறான். கம்பன் கண்டராமனிடத்துச் சிறப்பாயிருப்பது அவனது அழகே. அந்த அழகை ஆராதனை பண்ணிப் பண்ணியே காவியம் வளர்கிறது. விரிகிறது, உயர்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல தானே!