பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

9

காமம் கடிந்த காதல் வாழ்வில் தலைநின்றவர்

ஆண்டாளா? மாணிக்கவாசகரா?

காமம் கடிந்த காதல் வாழ்வில் தலைநின்றவர் ஆண்டாளா? மாணிக்கவாசகரா? என்று பொருள் அமைந் திருக்கிறது இன்றைய பட்டிமன்றத்திற்கு. காமகோடி பீடத்து ஆச்சார்ய சுவாமிகளின் அருள் ஆணையின் பேரில் திருப்பாவை, திருவெம்பாவை விழாக்கள், தமிழ்கூறும் நல்லுலகத்தில் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் சைவ, வைணவ ஒருமைக்கு வழிவகுக்க இந்த விழா உதவி புரியும் என்று எண்ணியே ஆச்சார்ய சுவாமிகள் இப் படிக் கட்டளை இட்டிருக் கிறார்கள். ஆனால், கோவை நன்னெறிக் கழகத்தாரோ, ஆண்டாளுக்கும், மாணிக்க வாசகருக்குமே ஒரு போட்டியை ஏற்படுத்தி விட்டனர். சைவப்பற்று மிகுந்த தமிழறிஞர் ஒருவர், "இந்த விழாவில் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டேன், என் வாயால் மாணிக்கவாசகரை விட, ஆண்டாள் தலை நின்றவர் என்று எப்படிக் கூறுவேன், என்னை விலக்கி விடுங்கள்' - என்று சொல்லி