பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி மண்டபம் -சில சிரஞ்சீவி நினைவுகள்

- - டி.கே.சி. நடராஜன்

'பன்னரும் கலை தெரி பட்டி மண்டபம்' என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாக்கு. "பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே’ என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு. இவர்கள் காலத்தில் அத்தனை பிரசித்தமாயிருந்து மறைந்த பட்டிமண்டபத்திற்குப் புத்துயிர் கொடுத்த வர்கள் காரைக்குடி, கம்பன் கழகச் செயலாளர் திரு.சா.கணேசன் அவர்கள். ஆனால் அதைப் பல விழாக்களிலும் ஏற்பாடு செய்து பிரபலப்படுத்திய தோடல்லாமல் ஒரு 'மவுஸையே உண்டாக்கியவர்கள் மாமா, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர் கள்தான்.

பட்டி மண்டபம் என்பதுதான் இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் காரைக்குடிக் கம்பன் கழகத்தைத் தவிர மற்ற இடங்களில் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சு வழக்கையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே.

நல்ல பல பட்டிமண்டபப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து, இலக்கிய அன்பர்களை எல்லாம் ஒரே