பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பட்டிமண்டபம்

இனி விஷயத்திற்கு வருவோம். முதலில் காமம் கடிந்த காதல் - என்றால் என்ன என்றே நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் காதல் என்றால் என்ன என்று எளிதில் விளக்கிட முடியுமா என்றே பார்க்கலாம். காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி பாடுவதாக சுவையான பாடல் ஒன்று உண்டு. மதுரையில் இருக்கிறான் ஒரு வீரன். ஆம், மதுரை வீரன்தான். அவனைக் காதலிக்கிறாள் ஒரு பெண். காதல் என்பது ஆண், பெண் இருபாலருக்குமே நிகழும் ஒர் அன்புப்பிணைப்பு, என்று நமக்குத் தெரிந் திருந்தாலும், அது எப்படிப்பட்டதென்று எழுத்தால் எழுதிக் காட்ட முடியுமா? கடவுள் என்றால் யார் என்றுகூட எளிதாகச் சொல்லி விடலாம் போல் இருக் கிறது. காதல் என்றால் என்ன என்று சொல்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அதனைத்தான், மதுரை வீரனைக் காதலித்த பெண் உரைக்கிறாள். அவள் உரைப்பதாகக் கவிஞன் ஒருவன் பாடுகிறான். -

திக்கயங்கள் எட்டுமுட்ட

விட்ட புட்ப தாகையான் செழியர் சேரன் வளவர் வந்து

திரை அளக்கும் முன்றிலான் மைக்கருங்கண் மாதரார்

மனம் கவர்ந்த மாரவேள் மதுரைவீர கஞ்சுகன்

மணந்து தந்த காதல் நோய் கைக்குள் வந்து அகப்படாது

கண்முன் நிற்கும், ஒருவரால் காணொணாது காணும் என்று

காட்டொனாது, அது அன்றியும் ஒக்கும் என்ற உரைக்கலான

உரையும் இல்லை, இருவரும்