பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 109

உள்ளறிந்ததன்றி மற்றிவ்

ஊரறிந்ததில்லையே! என்பது காதலி ஒருத்தியின் பிரலாபமாக அமைகிறது. உண்மைதானே? காதலன், காதலி என்ற இருவரது உள்ளம் அறியும் காதல்தன்மையை, ஊரறியச்சொல்ல இயலுமோ?

சாதாரணக் காதலின் நிலையே இப்படியென்றால், காமம் கடிந்த காதல் என்றால் என்ன என்று விளக்க முடியுமா என்ன? முதற் பார்வையிலேயே அரும்பி, பின்னர் நெருங்கிப் பழகுவதன் காரணமாகப் போது ஆகி அதன் பின் உடல் உறவு ஏற்படுவதன் காரணமாக மலர்வதே காதல், என்பது என்று தெரியும் நமக்கு. வள்ளுவரும் சொல்கிறாரே, -

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் - - என்றல்லவா காதல் நோயை வர்ணிக்கிறார். இதில் இருந்து தெரிகின்றது, உள்ளத்தில் அரும்புகின்ற காதல், உடல் உறவில் மலர்ச்சி பெறுகிறதென்று. அப்படி உடல் உறவு பெறுவதே லட்சியமாகக் கொண்டு, அதிலே ஊறித் திளைப்பவர்களைக் காமத்தின் வயப்பட்டவர்கள் என்கிறோம். அந்த உடல் உறவை எண்ணாது, உள்ளத்து உறவிலேயே மகிழ்ச்சி காண்கிறவர்கள் தான் உயர்ந்த காதல் வாழ்வில் திளைப்பவர்கள். அதனையே SgörSsv$$gi Platonic love sTsingasti. Slö5 Platonic love என்பதைத் தமிழாக்கம் செய்ய விரும்பிய அன்பர்களோ, திக்குமுக்காடி காமம் கடிந்த காதல் வாழ்வு என்று மொழிபெயர்த்திருக்கின்றனர். - -- - இது என்ன காதலில் ஒரு புது வகையாக இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? இது தமிழனுக்குப்