பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பட்டிமண்டபம்

புதியதொரு விஷயமல்ல. நமது அடியார்கள் பலரும் இற்ைவனிடத்தில் பக்தி செலுத்தும் போது இத்தகைய பக்திக்காதலிலே தானே திளைத்திருக்கிறார்கள். இறைவன் ஆணா, பெண்ணா இல்லை அலியா என்றே தெரியாது. அப்படிப்பட்ட இறைவனை ஒரு ஆடவனாக பாவனை பண்ணி அந்த ஆண்டவனிடத்தே காதல் கொண்டு வாழ்ந்ததாகவும் பாவனை பண்ணியிருக் கிறார்கள். கடவுளைத் தொழுவதற்கு பாவனை மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று பகவான் இராம கிருஷ்ணர் சொல்லுகிறார். அந்த பாவனை எப்படி எல் லாமோ உருவாகலாம். தன்னை ஒரு குழந்தையாகவும், இறைவனைத் தந்தையாகவும் தாயாகவும் பாவம் பண்ணலாம். அதனையே வாத்ஸல் ய பக்தி என்பர். இறைவனை ஆண்டானாவும், தன்னை தசரதனாகவும் பாவனை பண்ணித் தொண்டுகள் பல செய்யலாம். இதனையே தாசபக்தி என்பர். இன்னும் இறைவனைத் தன்னுடைய தோழனாகவும் கொண்டு அவனோடு உரையாடி மகிழலாம். இதனையே ஸ்க்ய பக்தி என்பர். இவற்றையெல்லாம் விடச் சிறப்பானது, மதுரபக்தி. தன்னைக் காதலியாகவும், இறைவனைக் காதலனாகவும் பாவனை பண்ணி, பக்தி செலுத்துவதையே மதுர பக்தி என்றனர். எல்லா பாவனைகளிலும் அதுவே சுவை யுடையது என்று தெரிந்து தானே இதற்கு மதுர பக்தி என்றே பெயர்சூட்டியிருக்கின்றனர். இந்த மதுரபக்தியில் திளைத்தவர்கள் தான் நம் சைவ சமயக் குரவர்களும், ஆழ்வார்களும் இவர்களெல்லாம், தங்களைக் காதலியாக வும், இறைவனைக் காதலனாகவும் கொண்டு பாவனை செய்திருக்கிறார்கள். அவர்கள் பாடிய பாடல்கள் பல, நாயக நாயகி பாவத்தில் அமைந்திருப்பதை நாம்